

























All Tamil, Bollywood, Hollywood Movie Actors Actress celebrity photo & Wallpaper Gallery
விஜய் டி.வி. ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்-நடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. 2008-ம் ஆண்டுக்கான விருதுகள் சென்னையில் நேற்று வழங்கப்பட்டன.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் ரசிகர்களின் சிறந்த அபிமான ஹீரோவாக நடிகர் கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் நடித்த கமலஹாசனுக்கு அந்தப் படத்தில் பிளிட்சர் என்ற வில்லன் கேரக்டருக்காக சிறந்த வில்லன் விருதும் பல்ராம் நாயுடு கேரக்டரில் காமெடி செய்ததற்காக சிறந்த காமெடி நடிகர் விருதும், தசாவதாரம் படத்தின் கதையை உருவாக்கியதற்காக சிறந்த கதாசிரியர் விருதும் வழங்கப்பட்டன. 4 விருதுகளையும் கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் கமலஹாசன் பேசும்போது, நான் முதன்முதலில் வில்லனாக நடித்த பிறகே கதாநாயகன்ஆனேன். இந்த வகையில் எனக்கு வில்லன் நடிப்புக்காகவும் விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது என்றார்.
அவருக்கு விருது வழங்கி பேசிய டைரக்டர் கே.பாலச்சந்தர் பேசும்போது, நான், நாகேஷ், கமல் மூன்று பேரும் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். ஒரு கதாநாயகனுக்கு காமெடிக்காக விருது வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாக இருக்கும். அந்த விருதை கமல் பெற்றிருப்பதுபெருமைக்குரிய விஷயம் என்றார்.