பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் வருமானம் பற்றி என்றாவது நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா....
அந்த பாலியல் தொழிலாளியின் வலையில் வீழ்ந்து ஒட்டு மொத்த சொத்தையும் இழந்தவர்கள் நிறையப் பேர் எனபது மாதிரியான கதைகள் நிறைய கேள்விப் பட்டிருப்பீர்கள். அது ஓரளவு உணமைகூட.. சில நபர்கள் லட்சக் கணக்கிலும் கோடிக் கணக்கிலும் கூட சம்பளம் பெறுவதாகக் கூறிக் கொள்வார்கள். ஆனால் அவர்களையெல்லாம் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
பாலியல் தொழில் என்பது சட்டவிரோதமான ஒரு தொழில் மட்டுமல்லாது, சமுதாய ரீதியிலும் ஏற்றூக் கொள்ள முடியாத ஒரு தொழிலாளகவே இருக்கிறது. இது உங்களுக்கு புரியாமல் கூட போகலாம். பிக் பாக்கட் அடிப்பவன், கஞ்சா விற்பவன், மற்றும் கடத்தல் வேலை செய்யும் மனிதர்களைப் பாருங்கள், அவர்களது சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஒரு ஹீரோவாகவே வலம் வருகிறார்கள். கொஞ்சம் ஈகை குணமும் இருந்தால் அவர்களை நாயகனாகவே கருதுவார்கள். ஆனால் பாலியல் தொழிலாளியிடம் தர்மம் பெருவதற்கு அவரோடு இணைந்து செயலாற்றவோ முடியாது. அந்த அளவுக்கு சமுதாயத்தால் ஒதுக்கப் பட்ட நிலையில்தான் உள்ளனர்.
பெரும்பாலான தொழிலாளர்களின் வாடிக்கையாளர்கள் அன்றாடம் கூலி வேளைக்குச் செல்பவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் பெரிதாக ஒன்றும் கிடைத்து விடாது . அதிகம் 50 அல்லது 100 ரூபாய் கிடைத்தாலே பெரிய விஷயம். அதுவும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முட்டாளாகவும் முரடர்களாகவும் இருப்பதால் ஒரே நாளில் இரண்டாவது வாடிக்கையாளரை சந்திப்பது என்பதே இயலாத ஒரு நிகழ்வு.. இதில் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப் பட்ட சூழல்வேறு. எல்லோருக்கும் தெரிந்து போன பாலியல் தொழிலாளிக்கு வேறு யாரும் வேலை வாய்ப்பு கொடுப்பதும் இல்லை. சுத்தமாக வேலைவாய்ப்பு மறுக்கப் பட்ட சூழலில் அவர்களுக்கு வேறு வேலையும் கிடைக்காத சூழலில் அவர்கள் இந்த தொழிலையே தொடரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர்.
இதில் பல வியாதிகளை வேறு சம்பாதித்துக் கொள்கின்றனர். அவர்களது வாடிக்கையாளர்களிடம் ஆணுரை அணிய வற்புறுத்தச் சொல்லும்போது பிடிப்பதில்லை என்று கூறி மறுக்கும் வாடிக்கையாளரே அதிகம் இருக்கின்றனர்.
வற்புறுத்த ஆரம்பிக்கும்போது வாடிக்கையாளர் இடம் மாறும் வாய்ப்பும் அதிகமாக இருப்பதால் பாலியல் சேவை செய்வோர் ஆணுறையின் அவசியத்தை வற்புறுத்தும் வாய்ப்பு இல்லாத நிலையிலேயே இறுக்கின்றனர்.
அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கிடைத்தாலும் அவர்களுக்கு தோழர்களோ தோழிகளோ கிடைக்காத சூழலே ஏற்படுகிறது. அந்த சூழலில் அவர்கள் சமூக விரோதிகளாக மாறும் வாய்ப்பே இருக்கிறது. மற்ற சமூக விரோதிகளை நாயகனாக அல்லவா தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்.
சுத்தமாக மரியாதை இல்லாத தொழிலை, சரியான வருமானமும் இல்லாத ஒரு தொழிலை இந்த அப்பாவி பெண்கள் ஏன் செய்கிறார்கள்?
மும்பை , கல்கத்தா என்ற இடங்களில் பெரிய கூட்டமே இருக்கிறதாம். அவ்வளவு பெரிய கூட்டத்துக்கும் வாடிக்கையாளர்கள் கிடைத்தால் அங்குள்ள ஆண்களில் எத்தனை பேர் அங்கு வருகிறார்கள்..? அவர்கள் வீட்டுப் பெண்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் என்ன செய்யமுடியும்.? நீண்ட தூரம் பயணம் செய்து வீட்டைவிட்டு வெளியே வசிப்பவர்களுக்கு புகை, மதுவைவிட மாதுதான் தேவை என்ற சூழல் எப்படி ஏற்பட்டது? இன்னும் சொன்னால் அவர்களுக்கு ஓய்வுதானே அவசியம். ஓய்வு கூட எடுக்காமல் இப்படி செய்கிறார்கள்.
பாலியல் தொழிலாளிகளை வைத்து எத்தனை பேர் எத்தனை கோடி சம்பாதித்தாலும் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை பரிதாபமாகவே சென்று கொண்டிருக்கிறது.
click Here / visite here
2009-03-21
பாலியல் தொழில் லாபகரமாக இயங்குகிறதா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment