Video review: Apple iPhone 5

click Here / visite here

Computer,Mobail,Sports,Fashion,Beauty,Love + Sex,Manage Your Life,Food,News See here-dhileep-annai-illam.blogspot.com

2009-03-23

கூகுள் சோதனைச் சாலை




மார்ச் 23,2009,00:00 IST




splarticles image
splarticles image
splarticles image
splarticles image
splarticles image

கூகுள் மெயில் இன்றைக்கு எங்கும் பிரகாசமாய் அனைவரின் ஏகோபித்த இமெயில் சாதனமாய் உலகெங்கும் பரவியுள்ளது. கட்டணம் செலுத்தி நிறுவனங்களிடம் இமெயில் வசதி பெற்றவர்கள் கூட (நான் உட்பட) தங்களின் முதன்மை மெயிலாக ஜிமெயிலைத்தான் கொண்டு இயக்கி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம் –– அளவில்லாத மெயில் பாக்ஸ் இடம், அழகான பேக் கிரவுண்ட், எழுத, பெற படிக்க பல வசதிகள் அனைத்து மொழிகளிலும் பயன்படுத்த உதவி என அடுக்கிக் கொண்டு போனாலும் முக்கியமான ஒன்று தான் இன்றும் அதனைத் தூக்கி நிறுத்தியுள்ளது.

அது ஜிமெயில் தொடர்ந்து வழங்கி வரும் அதன் புதுமையான வசதிகளே. உலகின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள கூகுள் லேப்ஸ் களில் தொடர்ந்து ஏதேனும் புதிய கண்டுபிடிப்புகள் சோதனைக்காக வந்து கொண்டே இருக்கின்றன. இவை வாடிக்கயாளர்களின் கருத்துக்களின்படி பின்னர் மாற்றங்களுக்குள்ளாகி நிலையானவையாக மாறுகின்றன. இன்றைக்குக் கூட ஜிமெயில் தளத்தில் Settings கிளிக் செய்து பின் Labs டேப் கிளிக் செய்து சென்றால் 30 வகையான புதிய சோதனை முயற்சிகளைப் பார்க்கலாம்.

இவற்றில் எது உங்களுக்குப் பிடிக்கிறதோ அதனைக் கிளிக் செய்திடலாம். பயன்படுத்தி சோதனை முடிவுகளைச் சொல்லலாம். பிடித்த சோதனை முயற்சி அருகே Enable என்ற பட்டனைக் கிளிக் செய்து Save changesஅழுத்தினால் போதும். இங்குள்ள சோதனை முயற்சிகளில் கீ போர்டு ஷார்ட் கட் மிக நன்றாக இயங்குகின்றன. எனவே குறைந்த பட்சம் இதனை நீங்கள் உங்களுக்காக இயக்கிக் கொள்ளலாம். ஜிமெயில் தரும் வேறு சில வசதிகளையும் இங்கு காணலாம்.

ஜிமெயில் பேக் அப் (ஆப்லைன்)


இந்த வசதியினை மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் அவுட்லுக் போல தருவதற்கு கூகுள் முயற்சிகளை எடுத்துள்ளது. இணைய இணைப்பு இல்லாமலேயெ உங்கள் இமெயில்களை இதில் கையாளலாம். பிரவுசரில் இயங்கும் ஜிமெயில் போன்ற சூழ்நிலையில் இயங்கும் வகையில் இந்த வசதி தரப்படுகிறது. எப்படி இருந்தாலும் இமெயில்களை அனுப்ப இணைய இணைப்பு வேண்டுமே என்று நீங்கள் எண்ணலாம்.


ஆனால் இமெயில் கடிதங்களை மெதுவாகவும் பொறுமையாகவும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாமே. மேலும் ஜிமெயில் இந்த வசதியின் மூலம் உங்கள் இமெயில்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. எனவே எப்போதாவது ஜிமெயில் இன் பாக்ஸ் அளவிற்கு வரையறை அறிவிப்பு செய்தாலோ அல்லது ஜிமெயில் சர்வரே பிரச்சினை செய்தாலோ உங்கள் பழைய மெயில்கள் அனைத்தும் பத்திரமாக உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய அக்கவுண்ட்டினை பேக் அப் செய்திட முதலில் லேப்ஸ் சென்று அதற்கான செயல்பாட்டினை உணச்ஞடூஞு செய்திட வேண்டும். இதனை மேற்கொண்டவுடன் ‘Offline 0.1’ என ஒரு லிங்க் வலது மூலையில் கிடைக்கும்.

இதில் கிளிக் செய்தால் உங்கள் பிரவுசர் கூகுள் கியர்ஸ் (Google Gears) ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்திட உங்களுக்கு அறிவுறுத்தும். (இந்த தொகுப்பு தற்போதைக்கு ஆப்பரா பிரவுசரில் இயங்காது.) நீங்கள் குரோம் பிரவுசரைப் பயன்படுத்தினால் இந்த கூகுள் கியர்ஸ் இயல்பாகவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். மற்ற பிரவுசர் பயன்படுத்துபவர்கள் இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்து எஞுச்ணூண் இன்ஸ்டால் செய்திடலாம்.

இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் இதனை முழுமையாக இயங்க வைக்க கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடவும். இப்போது கியர்ஸ் செக்யூரிட்டி எச்சரிக்கை ஒன்று உங்களிடம் கேட்கப்படும். உங்கள் ஜிமெயில்களை கம்ப்யூட்டரில் பேக் அப் எடுத்து வைக்கவா? என்று கேட்கப்படும். இந்த செய்திக்குப் பக்கத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். உடன் டெஸ்க் டாப்பில் இதற்கான ஷார்ட் கட் ஏற்படுத்தப்படும். உங்கள் மெயில்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் காப்பி செய்யப்படும்.

பொதுவாக நாம் ஜிமெயிலில் வரும் இமெயில் செய்திகளை அழிப்பதே இல்லை என்பதால் பேக் அப் செய்திட சிறிது நேரமாகும். இருப்பினும் கூகுள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மெயில் செய்திகளை பேக் அப் எடுக்காது. அதே போல ஸ்பேம் மற்றும் ட்ரேஷ் பெட்டிகளில் உள்ள மெயில்களும் கம்ப்யூட்டருக்கு வராது.


இனி இந்த பேக் அப் மெயில்களைப் பயன்படுத்தி உங்கள் மெயில்களுக்கான பதில்களையும் இன்டர்நெட் இணைப்பு இல்லாத போதே நீங்கள் தயார் செய்திடலாம்.


பதிலில் குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை காட்ட


இமெயில் கடிதங்களுக்குப் பதில் அளிக்கையில் நமக்கு வந்த மெயில் டெக்ஸ்ட் அனைத்தும் அதில் இணைக்கப்படுகிறது. இது பல வேளைகளில் தேவையற்ற இணைப்பாக அமைகிறது. ஏனென்றால் நம்முடைய பதில் நமக்கு வந்த மெயிலில் உள்ள ஓரிரு வரிகளுக்கு மட்டுமானதாக இருக்கும். அப்போது அந்த வரிகள் மட்டுமே இருந்தால் நன்றாக இருக்குமே என விரும்புவோம். ஆனால் முழு டெக்ஸ்ட்டும் தானாக இணைக்கப்படும். ஜிமெயிலில் நாம் விரும்பும் டெக்ஸ்ட்டை மட்டும் இணைக்கும் வசதி தரப்படுகிறது. Quote selected Text’ என இது அழைக்கப்படுகிறது.

மேலே விளக்கியது போல கூகுள் Labs லிருந்து இதனையும் இன்ஸ்டால் செய்திடவும். பின் உங்களுக்கு வந்த இமெயில் டெக்ஸ்ட்டில் நீங்கள் இணைத்த டெக்ஸ்ட்டை மட்டும் தேர்ந்தெடுத்து பின் Reply பட்டனை கிளிக் செய்து பதில் கடிதம் தயாரிக்கத் தொடங்கினால் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் மட்டுமே இருப்பதனைக் காணலாம்.

உங்களின் ஷார்ட் கட்ஸ்: ஜிமெயில் தரும் ஷார்ட் கட்கள் உங்களுக்கு குறைவாகத் தெரிகிறதா? நீங்கள் விரும்பும் வகையில் சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளை உருவாக்க விரும்புகிறீர்களா? கூகுள் ஜி லேப்ஸ் இதற்கொரு லிங்க் தருகிறது. அதனை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.

பின் ஜிமெயில் பக்கத்தில் Settings பிரிவில் புதிய டேப் ஒன்று உருவாக்கப்படும். இதனைக் கிளிக் செய்தால் ஏற்கனவே தானாக அமைக்கப்பட்டு வழங்கப்படும் கீ போர்டு ஷார்ட் கட்களை நீங்கள் அதன் மேப்பில் சென்று மாற்றி அமைத்திடும் வசதி தரப்படுகிறது. ஒரே மாதிரியான கீ தொகுப்புகளை வெவ்வேறு செயல்களுக்கு அமைக்கக் கூடாது.

இது போல அமைக்கப்படுகையில் ஜிமெயில் உங்களுக்கு எச்சரிக்கை வழங்கும். அதைச் சரியாகக் கண்டு கொள்ளாமல் அமைத்தால் முதலில் அமைத்த அதே ஷார்ட் கட் கீ அந்த செயல்பாட்டினை விட்டுவிடும். நீங்கள் அமைத்த ஷார்ட் கட் கீகள் அல்லது மாற்றி அமைத்த ஷார்ட் கட் கீகள் உங்களுக்குப் பின் நாளில் வேண்டாம் என நீங்கள் எண்ணினால் மீண்டும் ஜிமெயில் முதலில் வழங்கிய ஷார்ட் கட் கீ செயல்பாடுகளை Default பட்டன் அழுத்திப் பெற்று அமைத்துக் கொள்ளலாம்.

எச்சரிக்கை: மேலே சொன்ன செயல்பாடுகளுக்கான லிங்க்குகளை கிளிக் செய்து புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து வசதிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் இவை அனைத்தும் ஜிமெயில் தன் சோதனைக் கூடத்திலிருந்து உருவான புரோகிராம்களை பயனாளர்கள் மூலம் சோதனையிடத்தான் தருகிறது. எனவே ஏதேனும் ஒரு வசதி சரியாகச் செயல்படாமல் போகலாம். அது மட்டும் கிராஷ் ஆகலாம். அல்லது உங்கள் அக்கவுண்ட்டினை அணுகிப் பெறமுடியாமல் போகவும் வாய்ப்புகள் ஏற்படலாம். அது போல ஏற்படும் சமயத்தில் அக்கவுண்ட்டினைச் சரி செய்திட கூகுள் ஒரு வழி ஏற்படுத்தியுள்ளது. பிரச்சினை செய்திடும் குறிப்பிட்ட சோதனைச் சாலை வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். இதற்கு http://mail.google.com/mail/?labs=0 என்னும் முகவரியில் உள்ள தளத்தை அணுக வேண்டும்.




மவுஸ் பயன்பாடு


ஜிமெயில் மவுஸினை முற்றிலும் புதுமையான வழிக ளில் பயன்படுத்த வழி தருகிறது. Mouse Gestures என அழைக்கப்படும் இந்த சோதனை வசதி மூலம் இணைய தளத்தில் இருக்கையில் மவுஸை அசைப்பதன் மூலம் பல செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இந்த செயல்பாட்டினை இன்ஸ்டால் செய்த பின் மவுஸின் ரைட் பட்டனை அழுத்தியவாறே இமெயில் தளத்தில் இடது பக்கம் இழுத்துச் சென்றால் முன் உள்ள இமெயிலுக்குச் செல்லலாம். வலது பக்கம் இழுத்தால் அடுத்த இமெயிலுக்குச் செல்லலாம். மேலே இழுத்தால் இன் பாக்ஸ் செல்லலாம். இவ்வாறு இன்னும் பல செயல்பாடுகளை மவுஸை இழுத்தவாறே மேற்கொள்ளலாம். இவற்றை முழுமை யாகத் தெரிந்து கொண்டால் நீங்கள் அடுத்து கீ போர்டில் எந்த கீயையும் பயன்படுத்தாமல் மவுஸை மட்டுமே பயன்படுத்துவீர்கள் என்பது உறுதி

No comments: