Video review: Apple iPhone 5

click Here / visite here

Computer,Mobail,Sports,Fashion,Beauty,Love + Sex,Manage Your Life,Food,News See here-dhileep-annai-illam.blogspot.com

2009-06-14

அமிரகம்/வளைகுடாவிருந்து குறைந்த செலவில் (Rs.1.35/Min) இந்திய தொலைபேசிக்கு பேசுவது எப்படி?


குறிப்பாக அமிரகத்தில் என்ன பிரச்சினை என்றால் இங்க இருக்குற தொலைதொடர்பு நிறுவனம் (etisalat) பெருபாண்மையான voip தலங்களுக்கு தடை விதித்து இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் பெருபாண்மையானோர் வீட்டில் கனினீ மற்றும் இணைய வசதி/விவரம் இல்லாததால் இந்த தகவல் ரொம்ப உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


இதற்க்கு தேவையானவை:

01. Computer with internet, mic and headphone/speakers (இல்லாதவங்க நெட் சென்டர்ல இருந்தும் பேசலாம்)
02. gmail account with gtalk software.
03. பேசபோகும் நபரின் தொலைபேசி/கைபேசி எண்.
04. credit card/debit card. (கடன் அட்டை/ வங்கி அட்டை)

அதெல்லாம் சரி இதுல இந்தியாவுக்கு அழைப்பதால் எவ்வளவு கட்டணம் தெரியுமா - $0.029(அதாவது நிமிடத்திற்க்கு இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் முப்பதி ஏழு காசுகள்)

முதலில் gtalkல் sign-in ஆக வேண்டும்.

அடுத்து gtalkல் உள்ள +Add யை கிளிக் செய்து service@gtalk2voip.com என்ற முகவரியை சேர்கவும்.


service@gtalk2voip.com add செய்த உடன் அதன் chat windowல் mypage என்பதை டைப் செய்து enter-யை அழுத்தவும்.


அதில் வரும் லிங்கை கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போன்ற விண்டோ வரும்.


அதில் buy credit யை கிளிக் செய்யவும் அதன் பின் எவ்வளவுக்கு வேண்டுமோ சார்ஜ் செய்து கொள்ளவும்.



உங்கள் வங்கி/கடன் அட்டை மூலம் பணம் செலுத்தவும்.

பிறகு மீண்டும் +add பொத்தானை அழுத்தி நீங்கள் அழைக்கவிருக்கும் தொலைபேசி/கைபேசி எண் @gtalk2voip.com என்பதை add செய்யவும்.


உதரணம்: உங்களுடைய எண் 00919952439355 என்றால் நீங்கள் 00919952439355@gtalk2voip.com என்ற முகவரியை உங்கள் லிஸ்டில் add செய்து கொள்ளவேண்டும்.



பிறகு gtalkல் அழைப்பது போல் அழைக்கலாம் (பி.கு: நீங்கள் அழைக்க விரும்பும் ஒவ்வொரு எண்ணையும் அட்ரஸ் புக்கில் add செய்ய வேண்டும்)

ஏதாவது சந்தேகம் இருந்தால் அழைக்கவும்/பின்னூடம் இடவும்.

நன்றி வணக்கம்.


அப்படியே இந்த பதிவுகளையும் படிச்சுடுங்க.

No comments: